Posts

Showing posts from November, 2022

கோவை விடியல் சட்ட சேவை மைய துவக்க விழாவில் விடியல் குகனின் தலைமையுரை:

Image
கோவை விடியல் சட்ட சேவை மைய துவக்க விழாவில் விடியல் குகனின் தலைமையுரை: ஒரு தனி மனிதர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மனிதன் ஒரு சமுதாய விலங்கு. சமுதாயத்தில் கலந்து இருந்துதான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. மனிதன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்கின்ற போது ஒரு ஒழுங்கு முறை தேவை. ஒரு ஒழுங்கு முறை இல்லை என்றால் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மனித குலமே அழிந்து விடும். மனித குலம் அழிந்து விடாமல் நிலைபெற்றிருக்க அந்த ஒழுங்குமுறை அவசியமாகிறது.  இதை இதைச் செய்யலாம். இதை செய்யக்கூடாது என்று ஒரு ஒழுங்கு முறை வகுக்க வேண்டி உள்ளது. அந்த ஒழுங்கு முறையை முதலில் தர்மம் என்று அழைத்தார்கள். பிறகு அந்த தர்மம் சட்டம் என்ற பெயரில் உறுதிப்படுத்தப்பட்டது. கரைபுரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்திற்கு இருபுறமும் கரையிட்டு கட்டுப்படுத்துவது போன்று சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் வாழ வகுக்கப்பட்ட கரைதான் சட்டம். சுவர்படத்திற்கு 4 சட்டம் இருப்பதுபோல் வீட்டிற்கு நான்கு சுவர் இருப்பதுபோல் சட்டம் மனிதர்களை சூழ்ந்துகொண்...

விடியல் சட்ட சேவை மையத்தின் நோக்கம்

Image
  மக்கள் அறிந்திருக்க வேண்டிய உரிமையியல், குற்றவியல் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,மக்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சனைகளுக்கு தக்க ஆலோசனைகள், சேவைகள்  அளிக்கவும் மாவட்டந்தோறும் சட்ட சேவை மையங்களை உருவாக்கி சமூக நலன் காத்திட பாடுபடும் ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள் சட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சட்ட உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்பு கிடைத்திடவும், சட்டத்தின் ஆட்சி ஏற்படவும் பாடுபடுவதே விடியல் சட்ட சேவை மையத்தின் நோக்கமாகும்.