பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை பரிசீலனை செய்ய வேண்டும்!
பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை பரிசீலனை செய்ய வேண்டும்! யுனிசெஃப் உடன் இணைந்து சிறார் நீதிக்கான உச்ச நீதிமன்றக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட போக்சோ சட்டம் குறித்த இரண்டு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் "காதல் வழக்குகள்" அல்லது சம்மதமுள்ள இளம் பருவத்தினர் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் வழக்குகளில் POCSO நீதிமன்றங்களின் தீர்ப்புகள்" என்ற தலைப்பு குறித்து தலைமை நீதிபதி திரு சந்திர சூட் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தியபோது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தில் (போக்ஸோ சட்டம்), பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயது குறித்து திருத்தம் செய்ய பாராளுமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயது 18 ஆக உள்ளது இதுபோன்ற வழக்குகளை கையாளும் நீதிபதிகளுக்கு கடினமான கேள்விகளை எழுப்புகிறது, இன்றைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக உள்ளதை பாராளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது மேலும் அவர் கூறியதாவது: "போக்சோ சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்களிடையே ஒப்புதல் உண்மையாக உள...